ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது
பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன.
இதன்போதே, விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சர்வதேச தராதரங்களைப் பின்பற்றவேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.