தேவையானவை:
பச்சைப்பயறு – 100 கிராம்
குதிரைவாலி – 200 கிராம்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 5 டம்ளர்
முந்திரி – 20
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – 75 கிராம்.
பக்குவம்:
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு பச்சைப் பயறை வறுத்துக்கொள்ளவும். பின்னர் குக்கரில் 5 டம்ளர் தண்ணீர் விட்டுகொதிக்கும்போதுவறுத்த பச்சைப்பயறு, குதிரைவாலி, உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து குக்கரில் மூன்று விசில்விட்டு அடுப்பை நிறுத்தவும். பின்பு சிறிய கடாயில் மீதமுள்ள நெய்யை சேர்த்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை கலந்து, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வறுத்து பொங்கலில் கலக்கவும்.
நன்றி -தினகரன்