துறைமுகத்தின் பகுதிகளை ஆழ, அகலம் ஆக்குதல் படகுகளை கட்டிவைக்க ஏற்றவாறு ஆழமாக்கி குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடல், மற்றும் தொழில் செய்யும் மீனவர்கள் தங்குவதற்கான வசதி சிற்றுண்டிச்சாலை படகுகள் கட்டுவதற்கும் திரும்பிச் செல்வதற்கான பாதைகளை அமைத்தல் துறைமுகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கும் என டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பான மாதிரி படம் காட்டப்பட்டு திட்ட முகாமையாளரால் அது தொடர்பிலேயே அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ அமைச்சின் செயலாளர்கள் நீரியல் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.