இந்த அணியில் முன்னணி வீரர்களான பெட் கம்மின்ஸ், ஜோஸ் ஹெசில்வுட், மிட்செல் ஸ்டாக், அதேபோன்று க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக மார்க்கஸ் ஸ்டொயினிஸ், ஜேஸன் பெரேன்டோர்ப், சீன் அபோட் மற்றும் நாதன் எலீஸ் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆரோன் பின்ஞ் தலைமையிலான அணியில், சீன் அபோட், அஸ்டன் அகர், ஜேஸன் பெரேன்டோர்ப், அலெக்ஸ் கெர்ரி, நாதன் எலீஸ், கெமரூன் கிரீன், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் ங்லீஸ், மார்னஸ் லபுஸ்சேகன், மிட்செல் மார்ஷ், பென் மெக்டர்மோட், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொயினிஸ், ஆடம் செம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அடுத்த மாத ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு ரி-20 போட்டியில் விளையாடுகின்றது.