தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரிகளில் ஒருவரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா.வி இயக்கியுள்ள தொடர் “அனந்தம்”.
இது 1964-2015 வரை அனந்தம் என்ற வீட்டில் வாழ்ந்த 3 தலைமுறைகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உணர்ச்சிகரமான தருணங்களை தொகுத்துள்ள இணைய தொடர்.
இந்த தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹேப்பி யூனிகார்ன் சார்பில் வி.முரளி ராமன் இந்த தொடரை தயாரித்துள்ளார்.
இதன் திரைக்கதையை பிரியா.வி, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் மற்றும் ரீமா ரவிச்சந்தர் எழுதியுள்ளனர்.
பகத் ஒளிப்பதிவு பணியாற்றி ஏ.எஸ்.ராம் இசையமைத்து சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தொடர் வருகிற 22ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.