உங்கள் நகங்கள் அடிக்கடி உடைந்து விழுந்து விடுகின்றனவா? மிகவும் கவனமாக நகங்களை வளர்த்திருந்த நிலையில் அவை உடைந்து விழுவது மிகவும் எரிச்சல் தருவதாகவே இருக்கும். இது மிகவும் மோசமானது. உங்கள் நகங்கள் எப்போதேனும் உடைந்து விழுவது தற்செயலாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து நகங்கள் உடைந்து விழுவது நிகழ்ந்தால் அது பிரச்சனை தான். நீங்கள் நகங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என இதற்கு பொருள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எளிதான, ஆனால் செயல்திறன் வாய்ந்த வழிகளை பின்பற்றி வலுவான அழகிய நகங்களை பெறலாம்.
1. நம்முடைய முகம், தலைமுடி, உடலில் எண்ணெய் பயன்படுத்துகிறோம். இதை நம் நகங்களின் நலனுக்காகவும் பயன்படுத்தினால் என்ன? நிறைய ஜெல் அல்லது அழகிய நகங்கள் கொண்டிருப்பதால் உங்கள் நகங்கள் பலவீனமாக இருந்தால் அல்லது பிறப்பிலேயே அவை அப்படி என்றாலும், நல்ல நக புறத்தோல் எண்ணெய் ( கியூடிகல் ஆயில்) பயன்படுத்துவது சிறந்தது. இது உங்களை நகங்களுக்கு ஊட்டச்சத்து அளித்து அவற்றை வலுவாக்குகிறது.
2.உங்கள் நகங்களை இரு திசையிலும் சீராக்குவது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க ஒரு திசையில் மட்டும் நகங்களை சீராக்கவும்.
3.தண்ணீர் உங்கள் நகங்களை நீர்த்தன்மை அற்றுப்போகச்செய்யலாம். எனவே, கைகளை கழுவும் ஒவ்வொரு முறையும், உங்கள் கைகளையும், நகங்களையும் மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். மேலும் நகங்கள் உடைவதை தவிர்க்க, தண்ணீரில் நீண்ட நேரம் கைகளை வைத்திருக்க வேண்டிய வேலைகளை செய்யும் போது கையுரை அணிந்து கொள்ளவும்.
4.அடிப்படையான பூச்சு என்றாலும் கூட, நகப்பூச்சு பயன்படுத்துவது உங்கள் நகங்களை பாதுகாத்து, ஈரப்பத இழப்பை கட்டுப்படுத்துகிறது. அடிப்படை பூச்சு, நகங்கள் நிறம் மங்குவதையும் தடுக்கிறது. ஆனால், நகப்பூச்சில் அசிட்டோன், ஆல்கஹால், எத்தனால் அசிடேட் இருப்பதால் இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். அது உங்கள் நகத்தை பாதிக்கும். ,
5. நகங்கள் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நகங்களை அடிக்கடி கடிக்கும் பழக்கமாகும். இது நகங்களை பாதிக்கிறது. இரத்தக்கசிவு மற்றும் வலியை உண்டாக்கலாம்.