கிராம சேவகர்கள் பிரிவுகளை பொருளாதார மறுமலர்ச்சி மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை அமைக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பிரதானமாக மீன்பிடித் துறையை மேம்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு முன்னர் கால்நடை வளர்ப்பு தொடர்பாகவும் பல கலந்துரையாடல்கள்கள் நடைபெற்றன.
இக்கூட்டத்தில் பிரதமர் எதிர்வரும் இரண்டு வருட காலத்தில் மக்களின் போசணையை அதிகரிப்பது உள்ளிட்ட விரைவான உணவு பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் ஆலோசனைகளை வழங்கினார்.