0
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்தங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலும் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் இலங்கை விமானப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் படையின் விமானங்கள் மற்றும் விமானப் படைவீரர்களையும் தயார் நிலையில் வைப்பதற்கு தேவையான சகல அறிவுறுத்தல்களையும் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண வழங்கியுள்ளார்.