அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி, திங்கட்கிழமை, அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தல் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ளது.
விசேட விடுமுறை ,இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் குறித்த தினமானது, தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் இவ்வாறு வழங்கப்படுவதாக, அமைச்சு விடுத்துள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 19ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சியைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை (08) தனது 96ஆவது வயதில் பால்மோரல் எஸ்டேட் இல்லத்தில் வைத்து காலமானார்.
திடீர் சுகவீனமுற்ற அவர், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் காலமானார்.