அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணத்தால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடங்களின் அலங்கார விளக்குகள் முன்கூட்டியே அணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நேரப்படி இரவு 10 மணிக்கெல்லாம் கட்டடங்களின் வெளிப்புறத்தை அலங்கரிக்கும் விளக்குகள் அணைக்கப்படும். அது பல மில்லியன் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
பின்னிரவு ஒரு மணி வரை விளக்குகளால் மின்னும் ஈபிள் கோபுரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் கடைசி வருகையாளர் கிளம்பிய பின் பாரிஸ் நகர நேரப்படி இரவு 11.45 மணிக்கு அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும்.