லெபனான் தலைநகர் பெயிரூட்டில் தனது சகோதரியின் மருத்துவ செலவுக்காக வங்கியில் முடக்கப்பட்டிருக்கும் தனது சொந்தப் பணத்தை பெறுவதற்கு வங்கி ஒன்றின் ஊழியர்களை பெண் ஒருவர் பணயக்கைதியாக பிடித்துள்ளார்.
எனினும் அவரின் 13,000 டொலர்களை வங்கி விடுவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். எனினும் கைது செய்யப்பட்டாரா என்ற விபரம் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் நிகழ்ந்த கடந்த புதன்கிழமை லெபனானில் மற்றொரு வங்கியிலும் இதேபோன்று தனது சொந்தப் பணத்தை பெறுவதற்கு ஆடவர் ஒருவர் வங்கியை முற்றுகை செய்துள்ளார்.
லெபனானில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் பணத்தை விடுவிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்பது அங்கு தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் நிகழக் காரணமாகியுள்ளது.