இரவில் சரியாக தூக்கம் இல்லாததற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்க்கை முறையில் செய்யும் சில மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்க முறைகளே.தூக்கம் என்பது நாம் நினைத்த நேரத்தில் தூங்கிவிட்டு, நினைத்த நேரத்தில் எழும்புவது கூடாது. தூங்குவதற்கு என்று சரியான நேரத்தினை வைத்துக்கொண்டு அந்த நேரத்திலேயே படுக்க ஆரம்பித்து விட வேண்டும்.
ஆனால் இந்த சம்பவம் ஓரிரு நாட்களில் பழக்கத்திற்கு வந்துவிடும். காலையில் எழும்பும் நேரமும் எந்தவொரு அலாரமும் வைக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே விழிப்பு வந்துவிடும்.
மூளை, செரடோனின் (Serotonin), மெலடோனின் (Melatonin) ஆகிய ஹார்மோன்களின் அளவைச் சரிசெய்து, இயல்பான உறக்கத்துக்கு உத்தரவாதம் தந்துவிடும்.நவீன இணைய யுகத்தில், தூக்கமின்மை (Insomnia) என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை என்பது குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்று கூட சொல்லலாம்.
இரவு முழுவதும் விழித்திருந்து, பகல் முழுதவதும் தூங்கும் பழக்கம் உள்ளது. இதனால், உடலின் ஒட்டுமொத்த செயல்பாடு, வேலை செயல்திறன் மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இந்த சிக்கலில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன.
நன்றி | Jaffna News