நம் முன்னோர்கள் கண்ட வைத்திய முறைகளிலும் இந்த இலை பெருமளவு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய இந்த இலை எப்படி எல்லாம் பயன்படுகிறது? நிம்மதியான தூக்கத்தை பெற இதை என்ன செய்யலாம்?
தீராத நோய்களையும் தீர்க்கும் அற்புதமான ஆற்றல் இந்த இலைக்கு உண்டு. இதன் இலை மட்டும் அல்லாமல் வேர், பட்டை, விதை, பூக்கள் என்று முழு தாவரமும் மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளது.
இந்த இலைக்கு நொச்சி இலை என்று பெயராகும். நொச்சி இலை பலரும் அறிந்திருக்க கூடும், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். பொதுவாக நொச்சி இலையை ஆவி பிடிக்க பயன்படுத்துவார்கள், இதனால் தலைபாரம் குறையும்.
இந்த நொச்சி இலையை பிரஷ்ஷாக பறித்து ஒரு சுத்தமான காட்டன் துணி அல்லது நீங்கள் உபயோகப்படுத்தும் தலையணை உறையில் கூட நிரப்பி வையுங்கள். பிறகு இதை நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இதனால் நீர் கோர்வை இருந்தால் இது முழுமையாக உரிந்து கொண்டு, உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.