செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம்

நான்காவது விரலில் மட்டும் திருமண மோதிரத்தை அணிய காரணம்

2 minutes read

திருமண மோதிரம்

தம்பதிகளுக்குள் ஏற்படப்போகும் பந்தத்தின் அடையாளமாக திருமண மோதிரம் இருக்கிறது.
உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர்.

இருப்பினும் சிலருக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் நாம் ஏன் அதனை எப்பொழுதும் நான்காவது விரலில் அணிகிறோம் என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுகின்றது. அதற்கு பின்னால் பல காரணங்களும்,கதைகளும் இருக்கிறது.

திருமணத்தின் அடையாளமாக இடது கையில் மோதிரம் அணியும் வழக்கம் கிபி 1549 ஆம் ஆண்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபையில்தான் இந்த பழக்கம் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

அதற்கு முன் வலது கையில்தான் மோதிரம் அணியப்பட்டு வந்தது. அல்லது கை ஒருவரின் பலத்தை பிரதிபலிப்பதால் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்பின் பல்வேறு மாற்றங்களால் இது இடக்கைக்கு மாற்றப்பட்டது.

ரோமானியர்களின் நம்பிக்கைப்படி “விஞ்ஞானம் அதிகம் முன்னேறாதபோது, நம் கையின் நான்காவது விரலில் இருந்து ஒரு நரம்பு நேராக இதயத்திற்கு ஓடுகிறது என்று நம்பப்பட்டது. இது பொதுவான நம்பிக்கையாக கருதப்பட்டாலும் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருந்தது.

நான்காவது விரலில் மோதிரம் ஏன் அணியப்படுகின்றது? சீனர்களின் நம்பிக்கைப்படி நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒவ்வொரு உறவை பிரதிபலிக்கிறது. இதில் நான்காவது விரல் நம்முடைய வாழ்க்கைத்துணையை பிரதிபலிக்கிறது.

கட்டை விரல் பெற்றோர்களையும், நடுவிரல் உங்களையும், சுண்டு விரல் குழந்தைகளையும் பிரதிபலிக்கிறது. இந்த காரணத்திற்கு பின்னால் சீனர்கள் ஒன்றையும் விளையாட்டையும் வடிவமைத்துள்ளார்கள்.

நான்காவது விரலில் அணிய காரணம் என்ன? முதலில் உங்களின் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து உங்களை பிரதிபலிக்கும் உங்களின் நடுவிரலை மட்டும் கீழ்நோக்கி மடக்கி உங்கள் குழந்தைகளின் விரலான சுண்டு விரலை பிரிக்க முயற்சியுங்கள்.

உங்களால் எளிதில் இதனை செய்ய முடியும். ஏனெனில் குழந்தைகள் குறிப்பிட்ட காலம் வரைதான் உங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கான குடும்பம் அமைந்த பிறகு உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

இதனைத் தொடர்ந்து உங்களின் விரலாய் பிரிக்க முயலுங்கள், இதையும் எளிதில் செய்து விடலாம், உங்கள் உடன்பிறந்தவர்களும் உங்களை விட்டு விலகுவதன் அடையாளம் இது. இதேபோல உங்களின் கட்டை விரலையும் நீங்கள் பிரிக்கலாம். உங்கள் பெற்றோரும் காலம் முடிந்தவுடன் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

இப்போது உங்கள் வாழ்க்கைத்துணை விரலை நீங்கள் எவ்வளவு முயன்றாலும் பிரிக்க முடியாது. ஏனெனில் உங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமே உங்களுடன் இறுதிவரை வரப்போகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதனால்தான் நான்காவது விரலில் மோதிரம் அணியப்படுவதாக சீனர்கள் கூறுகிறார்கள்.

நன்றி | வவுனியா நெற்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More