நாம் வெளியில் செல்லும் போது பொதுவாக எதிர் கொள்ளும் பிரச்சனை வியர்வை துரு நாற்றம் ஆகும். இதற்கு முக்கிய காரணங்கள் பல உண்டு அவற்றை நாம் இன்று பார்ப்போம்.
மனநிலை: அதிகமான பதட்டம் பதட்டம் அல்லது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் பயத்தினால் எந்த வேலைப்பாடும் இன்றி பெருமளவு வியர்வை வெளிப்பட வாய்ப்புகள் இருக்கிறது. திடீரென உங்கள் தேகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் கலக்கும் வியர்வையானது அதிக துர்நாற்றம் வீசுகிறது.
உடை : செயற்கை நூலிழை காட்டன், கம்பளி போன்ற இயற்கை நூலிழை இன்றி, ரேயான், பாலியஸ்டர் போன்ற செயற்கை நூலிழையால் தயாரிக்கப்பட்ட உடைகள் அணியும் போது அதிக வியர்வை சருமத்தில் இருக்கும் பாக்டீரியாவோடு கலந்து துர்நாற்றம் வீசலாம்.
உணவு : நேற்றைய இரவு உணவு நேற்று நீங்கள் உண்ட இரவு உணவும் அதிகமாக வீசும் வியர்வை துர்நாற்றத்திற்கு ஓர் காரணமாக திகழ்கிறது. இரவு உணவில் அதிக மசாலா உணவு அல்லது பூண்டு, வெங்காயம் சேர்த்து உண்பதால் காலை செரிமான பிரச்சனை ஏற்படும், இதனால் உடல் துர்நாற்றமும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்