இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி முகமாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேரூந்துடன் halo trust நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி பயணித்த பேரூந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரித்தனர்
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடதக்கது.