யோகா என்பது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்கும் பயிற்சி ஆகும். ஆனால் காலம் நேரமும் ஓடும் இவ்வாழ்க்கையில் யோகா பயிற்சி என்பது இப்பொழுது எல்லாம் கைவிடப்பட்டுள்ளது.
படுக்கை விரிப்பில் இருந்த படியே இந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
தரை விரிப்பில் முதுகுப்பகுதி தரையில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்கள் வலது முழங்காலை மடக்கி இடது முழங்காலின் மேல் வைக்க வேண்டும். வலது பாதம் சற்று வெளிப்புறமாக இருக்குமாறு வைக்க வேண்டும். பக்கவாட்டில் கைகளை தோள்பட்டையின் உயரத்திற்கு சமமாக நீட்ட வேண்டும். மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
மூச்சை வெளியே விடும் போது தோள்பட்டை மற்றும் இடுப்புக்கு இடைப்பட்ட பகுதியை அப்படியே இடது புறம் திருப்பி மற்றும் தலையை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டையை பார்க்க வேண்டும். தோள்பட்டை களை தரையில் படும்படி செய்து பின்னர் வலது தொடையை தரையில் படும்படி செய்ய வேண்டும்.
மேலும் இடது கையை வலது தொடையின் மீது வைத்து கீழே படும் படி செய்ய வேண்டும். இதே நிலையில் 3-4 மூச்சுப்பயிற்சி அல்லது உங்களால் முடிகின்ற அளவு வரை செய்ய வேண்டும். பிறகு மூச்சை வெளியிட்டு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். இதே பயிற்சியை அடுத்த பக்கம் மாற்றி செய்யவும்.