இதை பற்றி நாம் பெரிதாக ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை அது என்னவென்றால் ஒரு வேலையோ அல்லது படிப்பு சமந்தமானவைகளோ ,கலை சமந்தமானவைகளோ , கணனி சமந்தமானவைகளோ எந்த வினைகளை நாம் நம் இலக்கை நோக்கி செய்கிறோமோ அதை தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யவேண்டும் .
அதாவது இன்று காலை 8 மணியளவில் செய்தால் நாளையும் அதே நேரத்தில் என ஒரு நிமிடத்தில் வைராக்கியமாக செய்ய வேண்டும் இது உங்கள் இலக்கில் சிறிய காரியமாக செயற்படுத்தலாம் காலம் செல்ல செல்ல அந்த கால அளவையும் காரியத்தின் அளவையும் நாம் மாற்றி கொள்ளலாம் ஆனால் ஆங்கேயும் தொடர்ச்சியாக பின்பற்றி முடிக்க படும் போது தான் இதன் பயிற்சியின் வலிமை தெரியும்.
இதை ஜப்பானியர்கள் ‘கெய்சென்’ முறையில், அன்றாட வாழ்வில் சோம்பலை அகற்றுவதற்கான ஒரு நிமிட பயிற்சி என்கின்றனர்.
அதைக் கண்டறிந்தவர் மசாகி இமாய்.