கடந்த 15/11/2022 சத்திய மூர்த்தி பவனில் பெரும் கட்சி மோதல் ஒன்று நடை பெற்றது இதனால் தலை கீழாக மாற உள்ளது பதவி மாற்றங்கள்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாங்கூரில் எம் எல் எ ரூபி ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் கட்சி தொண்டர்களை கேஸ் அழகிரி கன்னத்தில் அடித்ததை அடுத்து அந்த ஆர்ப்பாட்டம் மோதலாக மாறி கட்டைகளால் இருதரப்பு ஆதரவாளர்களும் அடித்து பொலிஸ் வந்து தீர்க்கும் வரையிலும் கட்சி சண்டைநீடித்தது
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் இதற்கு முழு காரணம் அழகிரியே என்றும் அவரின் தன்னிச்சையான நடவடிக்கையால் தான் இத்தகைய ஒரு மோதலும் நடை பெற்றது என்றுகுற்றம் சாட்டி அவரது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
ரூபி மனோகரன் தான் இதுவரை காலம் பெயரளவில் பொருளாளர் என்பதையும் கூறி இருந்தார்.இவ்வாறாக சண்டைகள் நடந்த வன்னம் இருக்கையில் இந்திரா காந்தியின் பிறந்த தின நிகழ்வில் கலந்துகொள்ள இருந்த கட்சி தலைவர்கள் சிலர் அழகிரி தலைமையில் கலந்து கொள்ளாது தனிமையில் வந்து இந்திரா காந்திக்கு வணக்கம் செலுத்தியதுடன் எதிர் வரும் 21 / 11 /2022 அன்று அழகிரிக்கு எதிரானவர்கள் ஒரு குழுவாகி தலைமையை டெல்லியில் சந்தித்து அழகிரியின் பதவிக்கு ஆப்பு வைக்க போவதாக தெரிய வருகிறது. அத்துடன் நாங்கூரில் நிர்வாகிகளுக்கும் நடவடிக்கை இருக்கு என்றவாறு காங்கிரஸ் கட்சி எதிரணி பக்க கருத்தாக உள்ளது.