மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட தாண்டியடிக் கிராமத்தில் மறைந்த தமிழ் உறவுகளின் நினைவாக சிரமதானப் பணி நடைபெற்றது.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஶ்ரீநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், மண்முனை மேற்கு வட்டாரக்கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் எனப் பலர் பங்குபற்றினர்.
இதன்போது வவுணதீவு பொலிஸ் நிலையப் பதில் அதிகாரி அவ்விடத்தில் சில தடங்கல்களைச் செய்ய முற்பட்டதோடு எதிரான கருத்துகளையும் முன்வைத்தார்.
அவற்றுக்குப் பதில் அளித்த பின்னர், தடைகளைக் கடந்து சிரமதானப் பணி சிறப்பாக நடந்தேறியது.