உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாக பார்க்கப்படும் தமிழரின் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உட்பட ஏனைய மிருக நல வாரியம் ஆகிய குழுக்கள் ஒன்றிணைந்து உச்சநீதினமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
1500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேணப்பட்டு வரும் விளையாட்டாகவும் சங்க இலக்கியங்களால் (கலித்தொகை ,பெரும் பாணாற்றுபடை) பாடல்களிலேயே ஏறுதழுவுதல் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது இதில் இருந்தே ஜல்லிக்கட்டு என்பது பழமை வாய்ந்த விளையாட்டாக அனைவரும் அடையாளம் காணலாம் .
அத்தகைய விளையாட்டு தோன்ற காரணம் முல்லை நில ஆயர்குலத்தவர். இவர்கள் காளை அடக்கும் ஆண்களுக்கு தமது பெண்களை திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். இப்படியான திருமண முறைமையில் இருந்து பெண்களை காக்க பெண்ணுக்கு பதில் சல்லி காசை காளையின் கொம்பில் கட்டினர். காளையை அடக்கி காசை எடுக்கவேண்டும் என்பதே வழக்காக இருந்தது அவ்வாறு நடந்த போட்டியை சல்லி கட்டு அதுவே இன்று ஜல்லிக் கட்டு என மருவி உள்ளது.இது வரலாறு
இவை இப்படி இருக்க தமிழகத்தில் மதுரை அலங்கா நல்லூர் , அவனியாபுரம் , பாலாமேடு போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டி அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்வர்.
வட தமிழகத்தில் இதே போட்டி மஞ்சுவிரட்டு என்ற பெயரில் 20 அடி நீளக் கயிற்றில் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க ஒரு சிலர் மட்டும் அதன் முன் நின்று கொம்பில் உள்ள பரிசுப்பணத்தை எடுக்க முயல்வர்.
ஆனாலும் மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளே உலக புகழ் பெற்றது .
முன்பும் ஒரு போது 2008 ஆம் ஆண்டு மிருக நல வாரியம் மற்றும் பீட்டா சேர்ந்து ஜல்லிகட்டுக்கு தடை உண்டாக்கியது பின் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்க சொல்லி போராட்டங்கள் மெரினா கடற்கரையில் விஸ்பரூபமாகி தமிழகம் முழுவதும் பரவி கட்டுப்பாடுகளுடனான அனுமதி கிடைத்தது
இதனை தொடர்ந்து இப்போது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்றைய விசாரணைகளில் இரு தரப்பு விவாதங்களும் சிறப்பாக நடந்தது அதில் ஜல்லிக்கட்டு சார் அணி தனது தரப்பு வாதமாக
” அரசியல் சாசனம் பிரிவு 21 படி விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை என்பதையும் மாந்தர்களுக்கு மட்டுமே அது பொருந்துமென்றது.
மேலும் சில தரவுகளையும் சுட்டி காட்டியது 1996 / 4,79,000 ஆக இருந்த காங்கேயன் காளைகள் 2013 ஆண்டு தடையின் 80620 ஆக குறைந்தது 2020 ஆம் ஆண்டின் தடை நீக்கத்தை தொடர்ந்து தமிழ் நாட்டில் கொண்டுவரப்பட்ட ஜல்லிகட்டு சட்டத்திற்கு பிறகு 1,27,5577 ஆக உயர்ந்தது இந்த காளையினம் விவசாயத்துக்கு பெரிதும் உதவும் ஒரு இனமாகவும் எனவே ஜல்லிகட்டுக்கு தடை விதிப்பதால் மக்கள் இதை வளர்க்கும் ஆர்வம் குறைவதால் எண்ணிக்கை குறைந்து தமிழர் பாரம்பரியம் அழிய வாய்ப்புண்டு” என்றது.
எதிர் தரப்பு மிருகங்களுக்கு தனி உரிமை உண்டு என்பதை ஜல்லிகட்டு, கம்பாள உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பான சிறப்பு சட்டங்களை ரத்து செய்யவும் கூறிய நிலையில் நீதிபதி குறுக்கிட்டு அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தார்.
கொசுக்கள் கடித்தால் மிருக வதை என்று அதை அடிக்காமல் விடுவீர்களா மற்றும் விலங்குகளுக்கு தனி உரிமை சட்டம் இல்லையென்று தெள்ள தெளிவாக கூறியதுடன்
குதிரை, யானை பந்தயங்களில் அவை மகிழ்ச்சியாக கலந்து கொள்வதில்லை என்றும் கூறியதுடன் பீட்டா தரப்பு முன்வைத்த புகைப்பட ஆதாரங்கள் குற்றச்சாட்டுக்கு போதுமானதாக இல்லை என்றும் அடுத்த வழக்கு 29 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது
இதில் குறிப்பிட வேண்டிய விடயம் உச்ச நீதி மன்றங்கள் செவ்வாய் , புதன் , வியாழன்களில் செயற்படும்