0
நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்கான மூன்று நிலக்கரிக் கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
அந்தவகையில் குறித்த கப்பல்கள் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மின்சாரத் தடை நேரத்தில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.