புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சுபத்திரன் வாழ்வும் அவர் கவிதைகளும் | பேராசிரியர் சி. மௌனகுரு

சுபத்திரன் வாழ்வும் அவர் கவிதைகளும் | பேராசிரியர் சி. மௌனகுரு

19 minutes read

-ஓர் நினைவுக் குறிப்பு

—————————————————

சுபத்திரன் என்ற பெயரில் ஒரு இரண்டு எழுத்தாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் ஒருத்தர் 1935 களில் தோன்றி  1970  களின்  பிற்பகுதியில்  காலமான  கவிஞர்  சுபத்திரன்

இன்னொருத்தர் அதற்கு பின்னால் தோன்றி  தினமுரசு  பத்திரிகை ஆசிரியராக இருந்த  சுபத்திரன்

இருவருடைய பெயர்களும் இலங்கை அரசியல் வரலாற்றில் பேசப்படுகின்ற பெயர்களாக இருக்கின்றன

 இருவருமே முற்போக்கு அரசியல் சார்ந்தும் போராட்ட குணம் சாந்தும் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்

நான் இப்போது கூறப் போவது முதலில் வாழ்ந்த   எனக்கு நெருக்கமான நான் அறிந்த கவிஞர் சுபத்திரன் பற்றி

சுபத்திரன் 1935 இல் பிறந்தார்  தாய் தந்தையருக்கு ஒரே ஒரு செல்ல மகன்

நான் சுபத்திரனை 1955  இல்  எனது பன்னிரண்டாவது வயதிலேயே சந்திக்கின்றேன்

அவருக்கு அப்போது 19   அல்லது 20 வயது  இருக்கும்

அவர் எங்கள் ஊருக்கு  வந்திருந்தார்

அமிர்தகளி எங்கள்  அயல் கிராமம் அங்கு  ஒரு  கலைக் க்ழகம் ஆரம்பிக்கப்பட்டது அதில் முக்கியஸ்தராக  இருந் தவர்   அவ் ஊரைச்  சேர்ந்தவரான கா,சி  ஆனந்தன் 

அவர் தனது  நண்பர்களுடன் இணைந்து  சிறையில்  சேகர் எனும் நாடகம் ஒன்றை  எழுதி    அவ்வூரில் அரங்கேற்றினார் 

அந்த  நாடகத்தில் நடிக்கச்சிறுவனான  என்னையும்  அழைத்திருந்தார் நானும் அதில் நடித்தேன்அப்போது நான் பாடசாலை நாடகங்களில் நடித்து  நல்ல பேரெடுத் திருந்தேன்

கா.சி ஆனந்தன் எனது வீட்டுக்கு வந்து என் தாய் தந்தை யுடன் பேசி என்னையும் அந்நாடகத்தில் இணைத் திருந்தார்

அப்போதுதான்  காசி ஆனந்தனின் நண்பர்களான  தங்கவடிவேல்(  அப்போது  அவர்  சுபத்திரன் ஆகவில்லை)  பாலுமகேந்திரா, முழக்கம் முருகப்பா   போன்றோர்   அங்கு  வந்திருந்தமை  ஞாபக்ம் வருகிறது

  எல்லோரும் பாடசாகையில்  மட்டக்களப்பு  மத்திய  கல்லூரியில்   ஒன்றாகப்  படித்தவர்கள் 

 பாலு மகேந்திரா மாத்திரம் சென்ற் மைக்கேல் மாணவர் 

அனைவரும்   இளம் வயதினர்

அவர்களுள்  தீட்சண்யமும் படபடவெனப் பேசும் இளைஞனுமான ஒருவர் அவர்களுடன்  வந்திருந்தார்

 அவரே  நமது சுபத்திரன்

 அப்போது  அவர் பெயர் சுபத்திரன  அன்று  தங்கவடிவேல்

முதல் சந்திப்பு   நன்றாக  ஞாபகம் உண்டு ஆனால் நெருக்க்ம் ஏற்பட்டது பின்னால்தான்

  மட்டக்களப்பிலே  பிறந்த  அவர்  யாழ்ப்பாணத்தில்  திருமணம் செய்தார் அவர் 1935   தொடக்கம்   1979  வரை வாழ்ந்திருக்கிறார்  அவரது காதலியும்  மனைவியும் சுபத்திரா  ஆவ்ர்.  அதனால் தங்கவடிவேல் தன் பெயரை  சுபத்திரன் ஆக்கிக்கொண்டார்

44  வருட வாழ்வு   அவரது உலக வாழ்வு   இளம் வயதில் மரணம் 

மஹாகவி பாரதியார் 39  ஆவது  வயதில் இறந்தார்

  பேரசிரியர் கைலாசபதியோ  49  ஆவது வயதில் இறந்தார்

  சாதிக்கப் பிறந்தவர்கள் பலர் இளம் வயதில் காலமானவர்களாகக் காணப்படுகிறாரக்ள்

கவிஞன் சுபத்திரன்  வாழ்ந்த காலம் இலங்கை வரலாற்றில் முக்கியமான ஓர் காலம்

சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில் முக்கியமான ஒரு காலம்

வடக்கு கிழக்கு பகுதிகளிலே

சத்தியாக் கிரகம்

 சட்ட மறுப்பு

ஊர்வலங்கள்

சிங்கள  சிறி எதிர்ப்பு

 அரசுக்கு எதிரான  ஆர்ப்ப்பாட்டங்கள்

  என்பன எழுந்த காலம்

 இவை மக்கள் இயக்கமாக மாறிய காலம் 

அனைத்து  மக்களும் ஆண்கள் பெண்கள் சிறுவர்  என்ற வேறுபாடின்றி  அப்போராட்டங்களில்  கலந்து கொண்டனர்

சுபத்திரன் இப்போராட்டங்களில் தீவிரமாகக்  கலந்துகொண்டார்

  நானும் கலந்துகொண்டேன் அப்போராட்டங்கள்  எம்மை இணைத்தன

  சுபத்திரன்  எனும் தங்கவடிவேல்     மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்று முன்னர் கூறினேன்

 மட்டக்களப்பில் சிங்களவாடி  எனும் அழைக்கப்படும்  மட்டக்களப்பின் உயர் குழாம் வசிக்கும்  பகுதியிலே பிறந்தவர் வளர்ந்தவர்   அவர்  அவரது  பெற்றோர்  இருவரும் ஆசிரியர்கள்

ஆனால் அவருடைய உறவுகளும் செயற்பாடுகளும் சிங்களவாடியை அண்மித்ததாக இருக்கவில்லை

அவருடைய உறவுகள்யாவும்.  நகரத்தின் புறப்பகுதியில் வாழ்ந்த சாதாரண மக்களுடனும்  விளிம்பு நிலை மக்களுடனுமே  இருந்தன

அவர் அந்த கிராம மக்களை தேடிச் சென்ற அவர்களோடு வாழ்ந்தார்

 அவர்கள் தந்த உணவை உண்டார்

அவர்களோடு சேர்ந்து மதுவும் அருந்தினார்.

 மகிழ்ந்தார்

  அவர்கள் குடும்பத்தின் ஓர் அங்கத்தினராயும் ஆனார் 

சுபத்திரன் பெயரை தமது பிள்ளைகளுக்கு இடும் அளவு அவர்கள் மனதில்  இடம் பிடித்தார்

 அவர்   ஒரு  பயிற்றப்ட்ட தமிழ் ஆசிரியர்

  மட்டக்களப்பில் உள்ள கன்னன்குடா எனும் கிராமத்தில் இருந்த ஒரு ஆரம்ப பாடசாலையில்  அவரது ஆசிரிய வாழ்வு    அக்காலத்தில்ஆரம்பமானது

. அப்போது கன்னங்குடா ஆறுகளால் பிரிக்கப்பட்டு தனியாக  ஒதுங்கி  இருந்தது

 மட்டக்களப்பில் இருந்து  ஆறு கடந்து  தோணீயில் தான் அந்தக் கிராமத்துக்குச் செல்ல முடியும்

தினமும் தோணியில்   ஆறு கடந்து  சென்று அங்கு கற்பித்துத் திரும்புவார்  சுபத்திரன்  

  சில வேளைகளில்  அங்கேயே தங்கியும் விடுவார்

 அங்குள்ள மக்களைப் பற்றி   அவர்களது  அன்றைய  வாழ்வு  பற்றி  எமக்கு அவர் கதை கதையாக கூறியிருக்கிறார்  அவர் பார்வையில் தான் கன்னன்குடா  எமக்கு முதன் முதலில் அறிமுகமாயிற்று

சாதாரண விவசாயக் கூலிகள் அங்கு தன் உழைப்பை போடிமார்க்கு அளித்து தாங்கள் வறுமையில்  வாடுவதையும்

 அங்குள்ள   அவர்களின்பிள்ளைகள்  கல்வி அறிவு கிடைக்காமல் வயலில் கூலி வேலை செய்வதையும்

வருத்தத்தோடு நம்மிடம் பகிர்வார்

 இன்று அந்த நிலைய அங்கு இல்லை

இன்று அதுவோர் கல்வி கற்றோர் வாழும் கிராமமாக மாறிவிட்டது

கலை வளம் மிக்க கிராமமாகவும்  மிளிர்கிறது

கூத்துக்கலையைக் கட்டிக்காக்கிறது

 கதிர் அறுத்தபின் அந்தக் கதிர்களைக்   குழந்தைகள் ஒன்றாக சேர்த்து இரு கரங்களாலும்அள்ளுகையில் பாம்பையும் சேர்த்து அள்ளுகின்ற கொடுமையை என்னிடம்  கோபத்தோடும்  மனத்துயரத்தோடும் கூறி

அவர் கண் கலங்கிய நாள்கள்  இப்போதும் ஞாபகம் வருகின்றன

சுபத்திரன் உணர்ச்சிப் பேர்வழி அவ்வகையில் அவரும்

ஓர் உணர்ச்சிக் கவிஞரே

 தொழிலாளர்  துயரம்

அடக்கப்படுவோர் துன்பம்

எளியவர் துன்பம்

ஏழை மக்கள் இன்னல் கண்டு  பொங்கியவர்  அவர்

துயரப்படுமஅவர்களின் விடுதலைக்காகவே தனது கவிதையை பயன்படுத்திய  ஓர்  உணர்ச்சி கவிஞர்

1960 களின் பிற்பகுதியில் யாழ்ப் பாணத்தில் மாவிட்ட புரம்  கந்தசுவாமி  கோயில் நுழைவு போராட்டம் ஆரம்பமாகி அது   தீண்டாமை ஒழிப்பு வெகுஜ்ன இயக்கம்  என  பேரியக்கமாக மாறிய போது அதை ஆதரித்து

ரத்தக்கடன்

எனும் நூலை வெளியிட்டதுடன் நேரிலும் சென்று அவர்களுக்கு ஆதரவும் வழங்கினார்

அப்போது    அவர் எழுதிய கவிதான் பாதித் தமிழன்  எனும் அன்று பிரசித்தமான ஒரு   கவிதை

சாதித் திமிருடன் வாழும் தமிழன் ஓர்

பாதித் தமிழனடா

 எனப் பாடினார்

அச்சமயம்தான்  பேராசிரியர் கைலாசபதி  என்னை புதிய கூத்துகளை  எழுதும்படி  வலியுறுத்தி  வழியும் காட்டி விட்டார் 

 சங்காரம்  வடமோடிக் கூத்து  அத்ன் விளைவே

சங்காரம் நாடக உருவாக்கத்திலும்  அதன் எழுத்தாக்கத்திலும்  சுபத்திரனின்  செல்வாக்கு  நிறைய உண்டு

 அவர்  மட்டக்களப்பு  மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்   அவரோடு கல்வி கற்றவர் தான் காசி ஆனந் தன்   இவர்களுக்கு ஆசிரியர்களாக

பிறிண்ஸ்  காசிநாதர்

 எஸ் பொன்னுத்துரை

 போன்றவர்கள் அங்கு இருந்தனர்

இவரோடு கூட ஒரு குழு திராவிட முன்னேற்ற சீர்திருத்த கருத்துகளினால் கவரப்பட்டு  வள்ர்ந்திருந்தது

அதற்கான காரணம் அன்றைய தமிழரசி கட்சியின் தோற்றமும் அது அன்று நடத்திய சத்தியா கிரக போராட்டங்களும். சட்ட மறுப்பு போராட்டங்களுமே

 ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்

அன்று அந்தப் போராட்டம்  சமூகத்தில் பல்வேறுபட்ட பல பிரதேசங்களைச்சேர்ந்த  பல இளைஞர்களை ஒன்றாக இணைத்திருந்தது

மத்திய கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்த மாணவர்களை மாணவர் குழுவை  அது ஈர்த்திருந்தது

அந்தப் போராட்டம் இந்த குழுவை மேலும் பெருக்கிய துடன் இந்த குழுவோடு அந்தப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட ஏனைய இளைஞர்களையும் இணைத்தது

நானும் அப்போது   வந்தாறு மூலைமத்திய கல்லூரியில்   விடுதியில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன்

தமிழ்ப் போராட்டம் அனைவரையும் இணைத்தது

 அப்படி நாம் அனைவரும் அன்று இணைந்தோம்

 சுபத்திரன் என அழைக்கப்படும்

தங்க வடிவேல்

காசிஆனந்தன்

முழக்கம் முருகப்பா

மாலா ராமச்சந்திரன்

ரமணி

 தம்பைய்யா  

அற்புத ராஜா குருஸ்

வடிவேல்

வீ சு கதிர்காமத் தம்பி

ஆரையூர் அமரன்

நவம்

ஓவியர் குமார்

என ஒரு பெரும் கூட்டம் ஞாபகம் வருகிறது

அனைவரும் அர்ப்பணிப்பு மிக்க தமிழ் வாலிபர்கள்

இதில் இன்று எஞ்சியிருப்போர் நானும் தம்பையாவும்   காசி ஆனந்த அண்ணனும் மாத்திரமே

இரவிரவாக  தெருவெல்லாம்  தமிழ் முழக்கம் செய்து கொடி பிடித்து  தீவட்டி ஏந்தி உர்வலம் போனவர்கள்  ஊர்வலம் சென்றவர்கள்   மாத்திரமல்ல  அடிகூட வாங்கியவர்களும் கூட

அவர்கள் அனைவரும் எமது  அண்ணன்மார்கள் அவர்களுள்  ஒருவனாக நானும்

அப்போதுதான் தீவிர போராட்ட  சிந்தனையுள்ள சுபத்திரனோடு  நெருக்கமான  உறவும்   தொடர்பும் எனக்கு ஏற்பட்டது

  நகங்களைக்கடித்தபடி  சிந்தனை வயப்பட்டவனாக தடித்த கண்ணாடிக் கூடாக பிரகாசிக்கும் கூர்ந்து அவதானிக்கும் கண்கள் உடையவனாக இருக்கும் ஒரு சிந்தனையாளனாகவே அவர் எனக்கு எப்போதும் தெரிந்தார்

அன்றிலிருந்து எங்கள் உறவு அவர் இறக்கும் வரை மிக மிக நெருக்கமான உறவாக இருந்தது

அந்த நெருக்கங்களையும் செயல்பாடுகளையும் அவர்   வாழ்வில் எதிர்கொண்ட நெருக்கடிகளையும்   அதனை   அவர்  எதிர்கொண முறையும் அதற்கு அவர்   அத்ற்கு பதில் கூறிய விதங்களையும் எழுதினால்

பொதுவாகஇலங்கையின் இன்னொரு பக்க வரலாறும் சிறப்பாக மட்டக்களப்பின் இன்னொரு பக்க வரலாறும்  கிடைக்கும்

யாராவது என்னைப் பேட்டி காண வந்தால் அவற்றை நான் விவரமாகக் கூற முடியும்

  அந்த  நினைவுகள் இன்னும் அழியவில்லை

பசுமரத்தாணி போல  மனதில் பதிந்து போய்க்கிடக்கின்றன

இங்கு நான் சுபத்திரனின் குணாம்சங்கள் பற்றி சில குறிப்புகள் கூறுகிறேன்

 அவர் எப்போதுமே அதிகாரத்திற்கும் சுயநலத்திற்கும் அநீதிக்கும் போலிக்கும் எதிராக துணிச்சலோடு குரல் கொடுத்த ஒருத்தர்

இதன் காரணமாக தமிழரசு கட்சி மீதும்  அதன் அன்றைய போலித் தலைவர்கள் மீதும் அதிருப்தியுற்று  அதிலிருந்து நீங்கிஅவர்  பொதுவுடமைப்  பாதையைத் தேர்ந்தெடுத்தார்

 அப்போது   பொதுவுடமைக் கட்சியின் மட்ட க்களப்பு   கிளையின் முழு நேர ஊழியராக இருந்தவர் தோழர் கிருஷ்ண குட்டி அவர்கள்

 அவர் கேரள நாட்டை சேர்ந்தவர்

அவர் தமிழ் பேசுவது அழகான மலையாளம் பேசுவது போல இருக்கும்

தன்.  அர்ப்பணிப்புமிக்க செயற்பாடுகளால் மட்டக்களப்பு மக்களின் மனம் கவர்ந்தவர்

குட்டி

என்றால்  மட்டக்களப்பில்  அது கிருஷ்ணக்குட்டி தான்

 அவரை அன்று மட்டக்களப்பில் அறியாதவர்கள் யாரும் இல்லை

இந்த குட்டியும் இன்னும் பலரும் சேர்ந்து மட்டக்களப்பில் பொதுவுடமைக்  கட்சியை   1940 களின்  இறுதிப் பகுதியில் ஆரம்பித்தார்கள்

ஆனால் அன்று தமிழரசு கட்சி மிகப் பெரும். செல்வாக்கு  மட்டக்களப்பு  மக்கள் மத்தியில் பெற்றிருந்த மையினால்   பொதுவுடமைக்  கட்சி வளர வாய்ப்பு   அங்கு ஏற்படவில்லை

எனினும் மட்டக்களப்பில் வாழ்ந்த தொழிலாளர்களை இணைத்து சிங்கள தமிழ் முஸ்லிம் பற்ங்கியர் என அத்தனை தொழிலாளர்களையும் இன பேதம் இன்றி தொழிற்சங்கத்தில் இணைத்தது டன்     தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளருக்கு நீதி கிடைக்க செய்தவர் இந்தக் கிருஷ்ணகுட்டி

மட்டக்களப்பின் நகர சுத்தி தொழிலாளர்களை சமூகமும் நிர்வாகம் ஒதுக்கிய போது அவர்களை ஒன்றிணைத்து போராட வைத்து அவர்களுக்கான வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர்கள் கிருஷ்ண குட்டியும் சுபத்திரனும் இன்னும் பலரும் ஆவ ர்

சுபத்திரன்  கிருஷ்ணக் குட்டியுடன் இணைந்து  மட்டக்களப்பில் பொதுவுடைமை  இயக்கத்தை வளர்த்து     முற்போக்கு எண்ணம் கொண்ட அர்ப்பணிப்புமிக்க ஒரு இளம் தலைமுறையை உருவாக்கினார்

நானும் அவரது  உரையாடலாலும் அவருடைய பேச்சுக்களாலும் அவருடைய சிந்தனைகளாலும் கவரப்பட்டு அந்த குழுவில் ஒருவனாக மாறினேன்

நான் பேராதனை பல்கலைக்கழகம் சென்றபோது என்னை வழியனுப்ப  மட்டக்களப்புப் புகையிரத நிலையத்துக்கு பலர் வந்தனர்

 சுபத்திரனும் வந்திருந்தார்

 புகையிரதம்   புறப்படப் போவதற்கான விசில்

ஊதப்பட்டாயிற்று

நகரத் தொடங்கியது     ரயில்  வண்டி

அந்த  நகர்வோடு   என்னோடு  தரையில் நடந்து வந்த சுபத்திரன் என்னை பார்த்து

“அங்கே கைலாசபதி என்று ஒருத்தர் இருக்கிறார் அவருடன் தொடர்பு கொள்”

என்றார்

அந்த  வார்த்தைகள்  ரெயினில் வரும்போது  என் காதுகளில்  ஒலித்துகொண்டேயிருந்தன

 இத்தனைக்கும்  சுபத்திரன் கைலாசபதியை அதுவரை காணவும் இல்லை   அவரோடுபேசவும் இல்லை

 இடதுசாரி சிந்தனைக்கு என்னை அறிமுகம் செய்தது போல

கைலாசபதியையும்  சந்தியும் என்று ஆலோசனை கூறியவர்  சுபத்திரன்

பின்னால் நான் பேராதனை பல்கலைக்கழகம் சென்றதும்

 கைலாசபதியைச்   சந்தித்ததும் 

இடதுசாரி சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆகியதும் சிங்கள மாணவர்களுடன் உறவாடியதும்

உலக அரசியலை புரிந்து கொண்டதும்

 ஒரு தனிக்கதை

விடுமுறைக்கு மட்டக்களப்புக்கு வரும் போதெல்லாம் ஏறத்தாழ முழு நாளும் சுபத்திரனோடு கழிக்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது

எனது  வீட்டுக்குக் தேடி  வந்து  விடுவார், அல்லது நான் அவர் வீடு  சென்றுவிடுவேன்

நான் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டு  வரும் விஷயங்களை கூறும்படி கேட்பார்

அறிவதில் அவருக்கு இருந்த ஆர்வம் அளப்பெரியது

எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பார்

பொதுவுடைக்  கட்சி

 மொஸ்கோ  சார்பு சீனச் சார்பு   எனப் பிரிந்த போது அவர் சீன தத்துவத்தின்பால் அவர் நின்றார்

மாசே துங் அவர்களே அவரின் அன்றைய உலகத் தலைவர்

அந்தச் சிந்தனைகள் உலகினை  மாற்றும் என  சமத்துவமான  சமூகத்தை  உலகில்  உருவாக்கும்  எனச்  சத்தியமாக நம்பி அதற்காக பாடுபட்டார் சுபத்திரன்

  மாவோ  பற்றி பல பாடல்களையும் சுபத்திரன் இயற்றியுள்ளார்

இன மோதல் தோன்றிய காலத்தில்   சுபத்திரன்  தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்காக குரல் கொடுத்தார்

 சத்தை இழந்த தமிழ்ச் சாதி தான் பிழைக்க

பத்தாயிரம்  கவிதை பாடமல் போவேனா

என அவரது   மிக  நெருங்கிய  நண்பர் காசி  ஆனந்தன் பாட

இவரோ

ஒருகோடிக் கவிதைகளால் உலகம் போற்றும்

பெரும்  கவிஞன் என நாமம் பெற்ற போதும்

ஒரு சொட்டு இரத்தத்தை  உரிமைப் போரில்

தருபவனின் புகழ் முன்னே தூசு

என்று பாடினார்

ஒருதடவை  அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் நான்  அவரிடம் ப.ஜீவானந்தம் எழுதிய

கோடிக்கால் பூதமடா தொழிலாளி

கோபத்தின் ரூபமடா

 என்ற பாடலை வியந்து  அந்த உருவகத்தை  ரசித்து

  “பார்த்தீர்களா?  ஒரு பூதம் கோடிக்கால்களோடு  நின்றால்  எப்படியிருக்கும்?

 என்று  கூறியபோது  உடனே அவர் எழுதிய பாடல்தான்

பலகோடிப்புலி ஒரு யானை உருவெனக்

கொண்டது போன்று நட

எனும் பாடல்

 தொழிலாளியை ஜீவானந்தம் கோடிக்கால் பூதம் எனக்கூற’

இவரோ அவனை  பலகோடிப்புலிகள் ஒரு யானை உருஎனக் கொண்டவனாக உருவகித்தார்

ஒருகோடி அல்ல  பலகோடிப் புலிகள்  சேர்ந்து  ஒரு யானையாக  நின்றால்  எப்படி இருக்கும்

 எனக் கூறிவிட்டுச்   சிரித்தார்

இது  அவர்  தொழிலாளிகளுக்கு  உற்சாக மூட்ட  எழுதியபாட;ல்

நகைச்சுவையாகவும்  கிண்டலாகவும்  பேசுவதில்  சமர்த்தர்  அவர்

அவரது பாடல்கள் அனேகமானவை எழுந்த பின்னணிகளை நான் அறிவேன்

உடனே  எழுதுவார் 

 நாம் உரையாடிக்கொண்டிருக்கையில்  அவருக்குப்  பாடல்்பிறந்து  விடும்

சங்கானைக்கென் வணக்கம்

  எனும் அவரது  புகழ் பெற்ற  பாடல்  அப்போராட்டம் பற்றிப் பேசிகொண்டிருக்கையில்  அவர்  எழுதிய  பாடல் 

  சில  வேளை எழுதி வந்து படித்தும் காட்டுவார்

அதிகமான பாடல்கள் உடன் எழுதிய பாடல்களே

 தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் எனவும் அப்போராட்டதில்  சிங்களத் தொழிலாளி இணையவேண்டும்   எனவும் அதற்கும் மேல்   சென்று  அவனே  அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கவும் வேண்டும் என  உணர்ச்சிபடப்  பேசுவார் அது  பற்றிக் கவிதைகளும்  எழுதினார்  பேசினார்

1977 நாட்டின்

 இனக் கலவரம் அவரை உலுப்பிவிட்டது

அவர் நேசித்த சிங்கள தொழிலாளர் வர்க்கமே முன்னின்று   இனக்  கலவரத்தில்  அந்த அநியாயங்களை செய்த போது அவர் நிலைகுலைந்து போனார்

எனினும் அதனை பகுத்தறிவோடு உணர்ச்சி வசப்படாமல்  ஆராய்ந்து அவர்கள் ஏவப்பட்டவர்கள்  அதிகார வர்க்கத்தால்  உபயோகிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு அரசியல் அறிவு ஊட்டப்பட வேண்டும் என்று சில கவிதைகள் எழுதினார்  வாதித்தார்

 பின்னாளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு அன்று உருவான சிற்சில  முற் போக்குப்போராட்ட குழுக்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்

இறுதியில் ஒரு நாள்  அவர் வாழ்க்கையில் விரக்தியுற்று தற் கொலை செய்து கொண்டார்

இது அவரது மிகச் சுருக்க வரலாறு ஆயினும் விரித்து எழுதினால் தன்னலமற்ற  ஒரு   தியாகியின் வரலாறு மலரும்

அவர் பற்றி கவிஞர் சாருமதி  எம் ஏ பட்ட ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செய்திருக்கின்றார்

அது   அச்சில் வெளிவரின் அவர் பற்றிய இன்னொரு முகம் தெரியும்

 சுபத்திரனின் கவிதைகள் கவிஞர் சாருமதியாலும்  பின்னர் என்னாலும் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக வெளிவந்துள்ளன

சித்திரலேகாவும்  அவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்

அவர் கவிதைகளை நமது விமர்சகர் பலர் கண்டு கொள்ளவில்லை  அவை கட்சி கவிதை,   பிரசாரக்  கவிதை என ஒதுக்கி விட்டவர் பலர்

   அவர்  கவிதைகள் பேசிய உள்ளடக்கம் அன்று பலருக்கு உவப்பானதாக இருக்கவில்லை அதுவும் அந்த விமர்சகர்கள் சுபத்திரன் கவிதைகளை கண்டு கொள்ளாமைக்கு ஓர் காரணமாகவும் இருக்கலாம்

அண்மையில் முகநூலில் அவர் பற்றிய  நெடும் குறிப்பு ஒன்றினைக் கண்டேன்

 அக்குறிப்பு சுபத்திரன் பற்றிய   ப்ழைய  ஞாபங்களை என் மனதில் கிளறி விட்டது

மீண்டும் அவர் கவிதைகளை எடுத்து வாசித்த போது அவருக்குள் இருந்த கவி உள்ளமும்  கவித்திறமையும் வெளிப்பட்டன

 கட்சி சார் கவிதைகள் அல்லாமல் வேறு கவிதைகளையும் அவர் பாடியிருக்கிறார்

அவரது அரசியல் பிரசாரக் கவிதைகளுக்குள்ளும் கவி நயம் காணப்படுகிறது

அவரது பெரும்பாலான கவிதைகள் அரசியல் சார் கவிதைகளாயினும்   அவர்  கவிதைகள் யாவும்

முழுக்க முழுக்க மனிதாபிமானமும் மக்கள் நல நாட்டமும் கொண்டவை

சமூகக் கொடுமைகண்டு

சமூக  அசமத்துவம்  கண்டு

  சமூக அநீதிகண்டு  

 சுரண்டல்   கொடுமை  கண்டு

  மூட நம்பிக்கை கண்டு

கொதிக்கும் ஒரு மனோநிலை  கொண்ட  ஒரு கவிஞனின் வார்த்தைப் பிரயோகங்களை அவரது  கவிதைகளில் காணலாம்

அவர் வாழ்ந்து கவிதை எழுதிய காலம்

 1950, 60, 70 கள்  இற்றைக்கு  50 வருடங்களுக்கு முன் என்பதனையும் நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்

மலையகம் பற்றி அன்றே அவர் பாடிய கவிதைகள் இன்றும் நினைவு கூரக் கூடியவை

அதனுள் ஒன்று காக்கை விடு தூது

இன்னொன்று  சிவனு இலட்சுமணன் பற்றி  எழுதிய கவிதை

கிழவியாகிவிட்ட தனது பழைய காதலியை   நினைத்து ஒரு கிழவன் பாடும் சுவையான கவிதையையும் அவர் பாடியுள்ளார்

அவர் கவிதைகள் சிலவற்றையும் அவற்றின் கவி நயங்களையும் இங்கு பதியலாம் என நினைத்து உள்ளேன்

பேராசிரியர் சி. மௌனகுரு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More