0
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், எம்.பி. பதவியை இராஜிநாமா செய்துவிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.
கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும் நோக்கில் மேயர் வேட்பாளராக அவரைக் களமிறக்குவதற்கு அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
தெற்கு ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.