0
“உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்குத் தயாராகுங்கள்.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.