நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலைக்கும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்த்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தப் பாடுபடும் என்று கே.அண்ணாமலை இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ருவான் விஜேவர்த்தனவுடன் அண்ணாமலை கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டார்.