செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை அன்பின் ஐயா நெடுமாறனுக்கு | ஈழத் தமிழரின் கடிதம் | பா. உதயன்

அன்பின் ஐயா நெடுமாறனுக்கு | ஈழத் தமிழரின் கடிதம் | பா. உதயன்

2 minutes read

அன்பின் ஐயா நெடுமாறனுக்கு !

அண்மையில் நீங்கள் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய கருத்து அனைவரையும் உங்கள் மேல் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. பிரபாகரன் உயிரோட இருக்கிறார் என்று வந்த அறிவிப்பு இத்தனை பூகம்பத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவரை ஓர் கவர்ச்சியான மக்களை ஈர்க்கும் தாக்கத்தை சமூக இணையத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ( Charismatic figure ) முகம் கொண்டு பார்க்க வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் விடிவுக்காய் எந்த வித அரசியல் ஆதாயமும் பதவியும் பணமும் இன்றி இயன்றவரை நீங்கள் ஆற்றிய அர்பணிப்புக்களை நாகரிகமாக நன்றியுணர்வுடன் நினைவு கொள்ளும் அதே வேளை ஐயா உங்கள் இறுதிக் காலத்திலும் உண்மையோடு உழைப்பீர்கள் என்கிற நம்பிகை நமக்கு சில ஐயங்களை உண்டு பண்ணியுள்ளது.

ஐயா நாங்கள் பெரு வலியை சுமந்த மக்கள். ஆயிரம் ஆயிரம் விடுதலை வீரர்கள் எம் மண்ணுக்காய் உயிரை தியாகம் செய்து போனவர்கள். எந்தக் கொள்கைக்காக இறுதி வரை போராடினார்களே அந்தக் கொள்கையோடு நிற்பதை விட நின்ற இடத்தில் நின்று போராடி உயிர் எறிந்து சென்றவர்கள். இவர்கள் சித்தாங்களை எல்லாம் வடிவாக அறிந்தவர் நீங்கள் இருந்தபோதும் உலக அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் தேசிய நலன் அவர்களின் நலன்களோடு உங்களை வேறு பாதை ஒன்றை தெரிய வேண்டிய நிலைக்கு உண்டு பண்ணியதோ ஏதும் அறியோம்.

தங்கள் மண் அந்த மக்களை என்று ஒடுக்கப்படும் ஒரு மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த எந்த மாவீரனும் இறப்பதில்லை ஆம் அவர்கள் எங்கள் எல்லோருடைய மனங்களிலும் உங்கள் மனங்களிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். இதனால் தான் பாமர மக்களில் இருந்து உலகத் தமிழ் இனமே இறுதி வரை ஈகைச் சுடர் ஏற்றி இவர்களை நினைவு கூர்கிறது. இன்று யார் யாரோ தங்கள் உயரங்கள் தெரியாது என்னென்னமோ எல்லாம் எழுதுகிறார்கள் எழுதட்டும் அது அவர்கள் சுதந்திரம். பிரபாகரன் என்ற நாமத்தை உச்சரிக்காவிடில் பலருக்கு அரசியல் சூனியம் தான். ஒரு காலம் தேசியம் பேசி உங்களைப் போற்றியவரும் இன்று உங்களை தூற்றுகிறாரே. ஒரு ஒடுக்கப்படும் விடுதலைக்காக உங்களை அர்ப்பணித்தவர் என்ற பெருமையோடு இருப்பது மட்டுமே நீங்கள் விடை பெறும் காலத்திலும் உங்களுக்கான மதிப்போடு ஈழத்தமிழர் மனங்களிலும் என்றும் வாழ்வீர்கள்.

ஐயா எல்லாமே ஒரு நாள் கடந்து போகும் என்ற நம்பிக்கையோடு என்றோ ஒரு நாள் மாற்றம் வராமலா போகும் அதுவரை ஐயா நீங்கள் இது வரை எமக்காய் உழைத்த உழைப்பை எல்லாம் வெறுமை ஆக்கி விடாதீர்கள். என்றும் ஈழத்தமிழன் நன்றியுணர்வோடு இருப்பான். நாம் நாகரீகமான மக்கள் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத்தந்த பாடம் இது. எழுத்திலும் பேச்சிலும் எவன் தன் நிலை தளும்பாமல் இருக்கிறானோ அவனே உண்மையான விலை போகாத தங்கள் புகழுக்காக மட்டும் சமரசங்கள் செய்து கொள்ளாத மனிதன். அதே போல் நாம் நாகரீகமா உங்களை கேட்பதெல்லாம் ஐயா அறம் சார்ந்த அரசியலோடு உங்கள் இறுதிக்காலத்தில் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு………………………நமக்கு மட்டும் என்ன ஒடுக்கப்படும் அனைத்து உலக மக்களுக்காய் இன்னும் பல வீரர்கள் பிறக்காமலா போவார்கள். ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு தன் சுய நிர்ணய உரிமையோடு வாழும் உரிமை உண்டு. ஒடுக்குபவன் இருக்கும் வரை உலக வரலாற்றில் ஒடுக்கப்படும் போராட்டம் ஓயப்போவதுவும் இல்லை மண்ணுக்காய் மரணித்த மாவீரம் இறக்கப் போவதும் இல்லை.

Oppressed nations have the right to self-determination’

-Lenin

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More