இராணுவ சேவையிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்காக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், முப்படையை சேர்ந்த மேலும் 30,000 பேர் இன்னும் சரணடையவில்லை என்பதை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.
பொது மன்னிப்பு காலத்தின்போது, ஆயுதப் படையிலிருந்து வெளியேறிய 70 அதிகாரிகள் உட்பட 22,729 பேர் சரணடைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் ஜனவரி 3ஆம் திகதி வரை 56 அதிகாரிகள் மற்றும் 20,116 சிப்பாய்கள் சரணடைந்துள்ளனர்.
கடற்படையிலிருந்து வெளியேறிய 2 அதிகாரிகளும் 1,311 அதிகாரிகளும் சரணடைந்துள்ளனர். விமானப் படையிலிருந்து வெளியேறிய 12 அதிகாரிகளும், 1232 அதிகாரிகளும் பொறுப்பேற்றனர்.