மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. வயதான தாதாவை பற்றிய கதை. சித்திக் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் காவலன், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.
‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்தார். அவருக்கு உடனே பிடித்து போனது. அதை தமிழில் ரீமேக் செய்து மம்முட்டி கேரக்டரில் நடிக்க விரும்பினார்.
இதையடுத்து அதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற மலையாள தயாரிப்பாளரை அணுகினர். அவர் ‘‘ஏற்கனவே அதன் தமிழ் உரிமையை ‘தென்காசி பட்டணம்’ படத்தை தயாரித்த எஸ்.எஸ்.துரைராஜ் வாங்கி இருக்கிறார்’’ என்றார்.
இதையடுத்து துரைராஜிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ரஜினியை வைத்து தானே இந்த படத்தை தயாரிக்க விரும்புவதாக துரைராஜ் கூறினாராம். இதில் நடிப்பது குறித்து ரஜினி ஆலோசித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கிறார்.