புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சபையில் சாணக்கியன் – திலீபன் சொற்போர்!

சபையில் சாணக்கியன் – திலீபன் சொற்போர்!

1 minutes read

யாருடைய சப்பாத்துக்கால்களை யார் நக்குவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எம்.பி. இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் ஈ.பி.டி.பி. எம்.பி. குலசிங்கம் திலீபனுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) கருத்துக்களை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன்ம், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் சில குற்றசச்சாட்டுக்களை முன்வைத்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதாகவும், இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் மோதலை ஏற்படுத்துவதே அவரது நோக்கம் எனவும் சாணக்கியன் எம்.பி. சாடினார்

இது தொடர்பில் ஈ.பி.டி.பி. எம்.பி. கு. திலீபன் பதிலளிக்கையில், ”சாணக்கியன் எம்.பி. வார்த்தை அறிந்து பேச வேண்டும். நீங்கள் கலப்படம் என்பது ஊர் அறிந்த – உலகறிந்த விடயம். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் யாருக்கு வால் பிடித்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்” – என்றார்.

இதற்குப் பதிலளித்த சாணக்கியன் எம்.பி., ”மண் மாபியா செய்பவர்கள் , மக்களின் வளத்தைக் கொள்ளையடிப்பவர்கள் கலப்படம் என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மஹிந்த ராஜபக்சவின் சப்பாத்துக்கால்களை நக்கியவர் நீங்கள்” – என்றார்.

இதற்குத் திலீபன் எம்.பி. பதிலளிக்கையில், ”சுமந்திரனின் சப்பாத்துக்கால்களை நக்குபவர் கூறுவது எனக்குப் பொருட்டல்ல” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More