Monday, September 20, 2021

இதையும் படிங்க

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ள நிலையில் பால்மா இறக்குமதி நிறுவனங்களால் அதன் விலையை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த...

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாம்!

நாட்டின் சுதந்திரம், அபிமானம் ஆகியவற்றின் மீது தலையிட சர்வதேசத்திற்கோ, சர்வதேச நிறுவனங்களுக்கோ இடமளிப்பதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகிழ்ச்சியாம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

ஆசிரியர்

திரையிசைப் பாடல்களை அழகூட்டிய இலக்கிய கையாடல்கள் | வெற்றி துஷ்யந்தன்

-ஓர் இரசனைக் குறிப்பு-

இசை என்றால் என்ன...? (பகுதி-1)

தென்னிந்திய திரைத்துறையின் மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி எப்போது எங்கள் மண்ணோடு கலக்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்து இன்றுவரை திரைத்துறை சார் ஒவ்வொரு கூறுகள் சார்ந்தும் ரசிகர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து வியக்கின்றவர்களாக மாற்றம் கண்டுள்ளார்கள்.

குறிப்பாக திரையிசைப் பாடல்கள் எப்போதும் ரசிகர்களின் உதடுகள் வழியே என்றைக்கும் முணுமுணுத்தபடியே இருப்பதனால், பாடல்கள் பற்றிய ஆய்வுகளும் எப்போதும் அவர்களிடத்தில் இருந்து விடுவதுண்டு. இந்த ஓட்டத்தில் திரைத்துறைப் பாடல்களில் இலக்கியப் பயன்பாடுகள் பல அன்றும், இன்றும் சரளமாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலக்கியப் பாடல்களை முழுமையாகவோ அல்லது அதன் வரிகளில் ஒருசிலவற்றை எடுத்து திரையிசைப் பாடல்களோடு இணைத்தோ அந்தப் பாடல்களை உருவாக்கி பாடல்களை சுவாரஷ்யப்ப‌டுத்திய பாடல்களாக பலவற்றை நாம் அறிந்திருக்கின்றோம். அப்படியான பல பாடல்களுள் நினைவிம் வரும் ஒரு சில பாடல்களை ஆராய்ந்து அவை எந்த இலக்கிய வடிவத்துக்குரியவை என்பதை சுவாரஷ்யமாக நோக்குவதே இந்தப் பதிவின் பிரதான நோக்கம் ஆகும்.

‘இருவர்’ திரைப்படத்தில் வைரமுத்துவின் அழகிய மொழிக் கையாடல்களோடு அமைந்த பாடலாக ‘நறுமுகையே நறுமுகையே’ பாடல் அமைந்திருந்தது. இந்தப் பாடலில்,

‘ஞாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்’

என்ற குறுந்தொகைப் பாடலை சரணத்தில்,

‘ஞாயும் ஞாயும் யாராகியரோ

நெஞ்சில் நின்றதென்ன

யானும் நீயும் எவ்வழி அறிதும்

உறவே சேர்ந்ததென்ன’

என்றவாறு மிக அழகாக யாத்திருந்தமை இன்று கூட இரசிக்கவைக்கிறது.

தளபதி திரைப்படம் உண்மையில் நட்பின் ஆழத்தை உணர்த்துவதாக வெளியாகிய ஒரு படமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்திலும் ‘ராக்கம்மாக் கையைத் தட்டு’ பாடலில் நான்காம் திருமுறைப்பாடலான திருநாவுக்கரசரின் தேவாரம் அப்படியே பிரயோகிக்கப்பட்டிருந்தது. அதாவது,

‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயின் குமின் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்’

என்னும் தேவாரம் பாடலின் இடையில் மிக அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

முரளி, கௌசல்யா நடிப்பில் உருவான தேவாவின் இசையில் வெளியான ‘வானம் தரையில் வந்து நின்றதே’ என்ற பாடலின் ஆரம்பமே தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடலான,

‘பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்’

என்ற நாலாயிர திவ்விய பிரபந்தத் திரட்டின் ஒரு பாடலாக அமைந்தது.

அடுத்து கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தில் தேவாவின் இசையில் வெளியான ‘சின்ன சின்னக் கிளியே’ என்ற பாடலின் நடுவே அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதியின் ஆறாம் பாடலான,

‘சென்னியது உன் திருவடிதாமரை சிந்தையுள்ளே

முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே’

என்ற பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

‘உன்னை நினைத்து’ திரைப்படத்தில் உருவான ‘ஹாப்பி நியூ இயர் வந்ததே’ என்ற பாடலின் இடையில் கூட ஆண்டாளினால் பெருமாளை எண்ணி அவர் கரம் பிடிக்க வேண்டிய அத்திருநாளை எதிர்பார்த்து காதலோடு பாடப்பட்டிருக்கும் ‘நாச்சியார் திருமொழி’ பாடலான,

‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்’

என்ற மிக அற்புதமான கவிச்சுவை மிக்க இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது.

இதே போல காதலன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் குற்றாலக்குறவஞ்சியில் உள்ளடங்கும் பாடலான,

‘இந்திரையோ இவள் சுந்தரியோ

தெய்வ ரம்பையோ மோகினியோ’

என்ற இலக்கிய பாடல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

உண்மையில் தென்னிந்திய திரைத்துறையின் தனித்தன்மைக்கு இப்படியான பாடல்கள் சான்று பகர்கின்றன எனலாம்.

இலக்கியத்தின் ஆழமும், அவை நமது வாழ்வியலோடு எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன, என்பதற்கு மேற்குறித்த சில பாடல்களை உதாரணமாகக் காட்டலாம். இலக்கிய பாடல்களை தனித்து படிப்பதை விட இசையோடும், மெட்டோடும் கலந்த பாடலாக கேட்பது அலாதியானது. அதன் இரசனை எம்மை வேறுதளத்திற்கே கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றது என்பதில் ஐயமில்லை.

வெற்றி துஷ்யந்தன்

இதையும் படிங்க

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு...

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்!

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள்

ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என ஆசிரியை லிஸ்சி கூறினார்.

திருப்பதியில் ரூ.2.30 கோடி உண்டியல் வசூல்

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்து தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

மேலும் பதிவுகள்

சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

அஞ்சலிக் குறிப்பு நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று...

நுரையீரல் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும்?

கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் எம்மில் பலருக்கு நுரையீரலின் முழுமையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே...

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

இலங்கையில் அக்டோபர் வரை ஊரடங்கு நீடிப்பா?

தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி...

புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள்

விநாயகருக்கு இந்தியா முழுவதுமே பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் சேவைகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் சேவைகள் இடம்பெறவுள்ளதுடன் தபால் நிலையங்களும் செயல்படவுள்ளன.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு