அமெரிக்காவில் பல வங்கிகள் பொருளாதார ரீதியாக கொண்டு நடத்த முடியாது வீழ்ச்சி கண்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் SVB எனும் Silicon Valley வங்கி மூடப்பட்டது.
இந்நிலையில், நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட Signature வங்கியும் தற்போது மூடப்பட்டுள்ளது.
Signature வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முழுப் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சும் வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.
மார்ச் 8ஆம் திகதி நிலவரப்படி, Signature வங்கியில் மொத்த வைப்புத் தொகை 89.17 பில்லியன் டாலராக இருந்துள்ளது.
மூலம் : Reuters