தென்கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் தாக்கிய ஃப்ரெடி புயலால் இதுவரை 522க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி என்ற பருவகால சூறாவளி புயல் காரணமாக கடுமையான மழை பெய்துவருகிறது.
அதனால், பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ளத்தாலும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்துள்ளதுடன், அவற்றில் 438 உயிரிழப்புகள் மலாவி நாட்டில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடும் மழையுடன் புயல் நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதுடன், புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் பாருங்க : இரண்டாகப் பிரியும் ஆபிரிக்கா கண்டம்; அதிர்ச்சி தகவல்