அமெரிக்காவில் பாடசாலைக்குள் திடீரென புகுந்த இளம்பெண் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
டென்னிஸி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் என்ற இடத்தில் இயங்கி வரும் பாடசாலையில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பாடசாலையில் நுழைந்த இளம்பெண் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் படுகாயமடைந்த 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
தொடர்ந்து அந்த பாடசாலையில் காவலாளி உள்பட மேலும் மூவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
இந்நிலையில் பாடசாலையை சுற்றி வளைத்த பொலிஸார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் கொல்லப்பட்டார்.
தாக்குதல் தொடங்கிய 14 நிமிடங்களுக்குப் பிறகு, பொலிஸார் கட்டிடத்திற்குள் நுழைந்து சந்தேக நபரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு முடிவுக்கு வந்தது.
தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் கொலையாளியின் ஹோண்டா ஃபிட் கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்ததையும் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.