சுவாசத் தொற்றுநோய் காரணமாக, போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ்சுக்கு கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகவும், ஆனால், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
தற்போது இத்தாலி, ரோமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸ், சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சமீப காலமாக போப் பிரான்சிஸ் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததால், அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம் – CNN