உழவு இயந்திரத்தைக் கொண்டு உழுது நிலத்தில் வரையப்பட்ட உலகின் மிகப் பெரிய ஓவியத்தை, இத்தாலிய நில ஓவியர் டாரியோ கம்பரின் (Dario Gambarin) வரைந்துள்ளார்.
பிரபல ஓவியர் பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) மிகப் பெரிய உருவப்படத்தையே அவர் இவ்வாறு வரைந்துள்ளார்.
1907ஆம் ஆண்டு பிக்காசோ தம்மைத் தாமே வரைந்துகொண்ட உருவப்படத்தின் அடிப்படையில் அவர் இதை வரைந்ததாக தெரிவித்துள்ளார்.
ஓவியர் டாரியோ கம்பரின், ஏற்கெனவே பல பிரபலங்களின் பெரிய அளவிலான படங்களை நிலத்தில் வரைந்துள்ளார்.
குறிப்பாக, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடி (John F Kennedy) காலமாகி, 50ஆம் ஆண்டு அனுஷ்டிப்பின் போது அவரின் படத்தை உழவு இயந்திரத்தைக் கொண்டு உருவாக்கியிருந்தார்.
மேலும், போப் பிரான்சிஸ், டோனல்ட் டிரம்ப் ஆகியோரின் படங்களையும் அவர் நிலத்தில் வரைந்துள்ளார்.