ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பாடசாலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தியதில் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவரான இல்னாஸ் கலியாவிவ் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றில் விசாரணை நடந்து வந்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதுடன், இதில் இல்னாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.