அமெரிக்காவின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டு வெளியிடப்பட்ட சம்பவத்தில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Jack Douglas Teixeira எனும் அவர், மத்தியப் புலனாய்வுத் துறையால் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ரகசியத் தற்காப்பு, உளவுத் தகவல்களை அவர் வெளியிட்டதாகப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன், அமெரிக்க வான் தேசியக் காவல்படையின் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர், இன்று போஸ்ட்டன் (Boston) நகர நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார்.
அமெரிக்காவின் முக்கியமான ராணுவ, உளவுத் தகவல்கள் Discord எனும் விளையாட்டுத் தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து, அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனியப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான ரகசியத் தகவல்கள் குறித்த இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.