படம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புக்குள்ளான இப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலிலும் அதிக சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்கள். மணிகண்டன் இயக்கியிருந்தார். இப்படம் கன்னடத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. கன்னடத்தில் இப்படத்திற்கு அம்மாநில அரசு முழுமையான வரிச் சலுகை கொடுத்திருக்கிறது.
தமிழ் படத்திற்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அமிதாப் நடித்த ‘பா’ படத்திற்கு 50% வரிச்சலுகை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் முழுமையான வரிச்சலுகை கிடைத்திருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.