“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் சட்டபூர்வமானது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்ட ரீதியானவை” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பொதுச் சபைக் கூட்டம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியின் தவிசாளராக இருந்த பீரிஸுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே கூட்டம் நடத்தப்பட்டது.” – என்றார்.
மொட்டுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது புதிய தவிசாளர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் சட்டபூர்வமானது அல்ல என்று பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலுயே மொட்டுக் கட்சி மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.