தெற்கு லண்டன் – லாம்பெத்தில் உள்ள ஸ்டாக்வெல் பார்க்கில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலத்தை, பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று (01) பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 வயதுடைய அந்த யுவதி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஸ்டாக்வெல் பார்க் சுற்றுவட்டாரத்தில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.