இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதன்காரணமாக சில பகுதிகளில் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.