அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் – பிரவ்ன்ஸ்வெலி நகரத்தின் ஒசனம் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் அருகே பஸ் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 7 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.