10 நாட்களாக காணாமற்போன கைல் என்ற 16 வயது சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுவனின் புகைப்படத்துடன் அறிக்கயொன்றை, இன்று புதன்கிழமை வெளியிட்ட ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார், சிறுவனின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
கடைசியாக ஏப்ரல் 30, ஞாயிற்றுக்கிழமை தென்பட்ட சிறுவனின் குடும்பப்பெயர் வெளியிடப்படவில்லை.
“ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் கைல் காணவில்லை” என விசாரணையில் ஈடுபட்டுள்ள பெருநகர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“கைல் 167 செமீ அல்லது தோராயமாக 5 அடி 6 இன் உயரம் கொண்டவர்” என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவர் இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிந்தால், 23MIS014313ஐ மேற்கோள் காட்டி 101 என்ற இலக்கத்தில் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.