0
பதுளை – ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறான பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள நீர் வடிகானுக்கு அருகில் குறித்த நபர் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மின்னல் தாக்கியதில் அவரது கையடக்கத் தொலைபேசியும் சேதமடைந்துள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.