நானுஓயா ரயில் நிலையத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொட்டக்கலை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா ரயில் நிலையத்துக்கு ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற ரயில் சில்லில் சிக்கியே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட இளைஞர் நுவரெலியா, லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த இளங்கோவன் கோவர்தனன் (வயது – 20) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.