கொரோனா வைரஸ் போன்ற எளிதில் பரவக்கூடிய நோய்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவும் புதிய கட்டமைப்பை உலகச் சுகாதார ஸ்தாபனம் தொடங்கியிருக்கிறது.
புதிதாகக் கிருமி தோன்றியதும் எல்லா நாடுகளோடு உடனே தகவலைப் பகிர்ந்து, கிருமி பெரிய அளவில் பரவாமல் தடுப்பது இதன் நோக்கமாக உள்ளது.
உலகச் சுகாகாத ஸ்தாபனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyes) புதிய கட்டமைப்பின் உன்னதமான இலக்கைப் பாராட்டியுள்ளார்.
இது உலகச் சுகாதாரப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகள் ஒன்றுபட்டுச் செயல்பட்டால் சுகாதார மிரட்டலைச் சமாளிப்பது சுலபம் என்பதை கொரோனா அனுபவம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.