இலண்டனில் மே மாத இறுதி மற்றும் ஜூன் தொடக்கத்தில் மேலதிக ரயில் வேலைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால், இது பல ரயில் சேவைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு நாட்களுக்குள், மூன்று ரயில் வேலைநிறுத்தங்கள் நடைபெறும், மே 31 புதன்கிழமை மற்றும் FA கோப்பை இறுதிப் போட்டியின் நாளான ஜூன் 3 சனிக்கிழமை ஆகிய நாட்களில் அஸ்லெஃப் ரயில் ஓட்டுநர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
RMT (National Union of Rail, Maritime and Transport Workers) தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஜூன் 2 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
மே 30 செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் இருந்து ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம் வரை ரயில் சேவையில் குறுக்கீடுகள் இருக்கலாம் என்று கால அட்டவணையில் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, பயணிகள் புறப்படுவதற்கு முன் தமது பயண திட்டங்களை இருமுறை சரிபார்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.