அணு ஆயுதத்தை களமிறக்க உள்ள ரசியா . ரசியா அதிபர் புடின் பெலாரசில் திட்டமிட்டபடி அணு ஆயுதங்களின் முதல் டெலிவரியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ரசியா முதன்முறையாக அணு ஆயுதங்களை அண்டை நட்பு நாடான பெலாரசுக்கு மாற்ற திட்டமிட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அது அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தலாக கருதப்பட்டது.
இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேசிய புடின், முதல் பாகம் முடிந்து விட்டதாகவும், கோடைக்காலத்தின் இறுதிக்குள் முழுமையாக அணு ஆயுதங்களை இடம் மாற்றும் பணி நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
ரசியா வுக்கு ஆபத்து ஏற்பட்டால் ஒழிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் புடின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.