3
ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் அறிமுக நிகழ்வு நாளை (ஜூன் 24) லண்டனில் இடம்பெறவுள்ளது.
தாயகத்தில் இருந்து தீபச்செல்வன் கலந்து கொள்ளும் நாவல் அறிமுகம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் விசேட நிகழ்வுகளில் ஒன்றான பயங்கரவாதி அறிமுக நிகழ்வு பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் இடம்பெறவுள்ளது.
திரள் அமைப்புடன் வணக்கம் இலண்டன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு கிளி பீப்பிள் அமைப்பு ஆதரவு வழங்க க அபியகம். முல்லை எக்ஸ்பிரஸ். ராம் றீரையில்ஸ். பிராங்கோ குரூப். அம்மா ஹோம் கெயார் சேவை. மிற்சி சாறீஸ் முதலிய அமைப்புக்கள் அனுசரனை வழங்குகின்றன.
நடுகல் நாவல் வாயிலாக உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வனின் புதிய நாவல் பயங்கரவாதியும் பலதரப்பட்டவர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நிலையில் லண்டனில் இந் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
படைப்பாளி சந்திப்பு, இரவுணவு முதலிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.